கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, March 15, 2009

தந்தைக்கு ஒரு தாலாட்டு

கவிஞ்சர் மு.மேத்தா அவர்களின் "இதயத்தில் நாற்காலி" என்ற நூலில் தந்தைக்கு ஒரு தாலாட்டு என்ற கவிதையை படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களாகவே இந்த கவிதயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். நேரம் இதோ வந்து விட்டது. நான் இரசித்த கவி நீங்களும் இரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...

தந்தைக்கு ஒரு தாலாட்டு

துருதுருத்த கவலைகளில்
தூக்கமில்லா இரவுகளில்
தவிதவிக்கும் தந்தையே!
நான்
தாலாட்டுப் பாடட்டுமா?

ஓய்வெடுக்க மனமின்றி
உழைப்பதற்கும் வழியின்றி
பாய் வெறுத்த தந்தையே
நான்
பாட்டொன்று பாடட்டுமா?

நீதியின் பாதையிலே
நெடும் பயணம் நடத்தியதால்
பாதியாய் ஆனவரே
நான்
பாராட்டுக் கூறட்டுமா..?

தேரோடும் கனவுகளைத்
தெருவேடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே
நான்
புகழ்மாலை போடட்டுமா...?

ஒன்பதாம் வயது முதல்
உருகியதை அறியாத‌
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான்
மேடை கட்டிப் பேசட்டுமா?

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் உன்னைத்
தட்டிக் கொடுப்பதற்கு
நான்
சந்திரனை அனுப்புகிறேன்!

உன் கண்ணை மூடி நீ
ஓய்வெடுப்பாய் சிறுநேரம் நீ
தூங்கி விழித்தவுடன்
நான்
சூரியனை அனுப்புகிறேன்!

பூமி உனக்களித்த‌
புழுக்கத்தை நீ மறந்து
கண் துயில்வாய் சிறு நேரம்
நான்
காற்றை அனுப்புகிறேன்!

வாழ்க்கை உனக்குச் செய்த‌
வஞ்சகத்தை நீ மறந்து
சிறுபொழுது கண்ணயர்வாய்
நான்
தென்றலை அனுப்புகிறேன்!

விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்! வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான்
அப்படியே அனுப்புகிறேன்!

மு.மேத்தா
நூல்:இதயத்தில் நாற்காலி


Post a Comment
.