கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, March 18, 2009

உன் பார்வை

நீ
கடந்து
போன தடயமே
இல்லாமல்
அமைதியாய்
இருக்கிறது
வீதி.!

ஆச்சரியம்!
அதி வேக‌
ரயிலொன்று
கடந்து போன‌
தண்டவாளம் போல்
இன்னும்
அதிர்கிறது
என்
இதயம்.

17 comments:

Anonymous said...

aha aha .. ennachu paiyanukku?

Anoj.

Anonymous said...

//அமைதியாய்
இருகிறது (இருக்கிறது)
வீதி.!

ஆச்சிரியம்! (ஆச்சரியம்)
அதி வேக‌
//


செயல் ஒன்றே...
அவள் கடந்துபோனது மட்டுமே!

ஆகிலும்...

பாதையிலோ அமைதி -அவன்
இதயத்திலோ அதிர்வு!

எப்படி பெண்ணே?!

நல்லாருக்கு கலை!

வாழ்த்துக்கள்!

(எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனியுங்கள் :))

தர்ஷன் said...

வாவ் நன்றாக இருக்கிறது
keep it up

kuma36 said...

ரொம்ப நன்றி ஷீ-நிசி !

கவிதை எழுத வருதானு ஒரு முயற்சி ஆனா வர மாட்டேங்குதே!!

//பாதையிலோ அமைதி -அவன்
இதயத்திலோ அதிர்வு!

எப்படி பெண்ணே?!//

இப்படியும் யோசிக்கலாம். நல்லாயிருக்கு

kuma36 said...

//தர்ஷன் said...
வாவ் நன்றாக இருக்கிறது
keep it up//

ஏன் தர்ஷன் இப்படி செய்றிங்க இது உங்களுக்கே நல்லா இருக்கா?

Anonymous said...

காதல் நச்
கவிதை எழுத வருதானு ஒரு முயற்சி ஆனா வர மாட்டேங்குதே!!
யார் சொன்னது!

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

கவிதை எழுத வருதானு ஒரு முயற்சி ஆனா வர மாட்டேங்குதே!!

ஹா ஹா சிரிப்பா இருக்கு கவிதை எழுதுவதற்கான முயற்சி என்று சொல்றது சும்மா சொல்லக்குடாது கவிதை ரொம்ப நல்லா இருக்கு............

kuma36 said...

//கவின் said...
காதல் நச்
கவிதை எழுத வருதானு ஒரு முயற்சி ஆனா வர மாட்டேங்குதே!!
யார் சொன்னது!//

வாங்க கவின். வேற யாரு நானே தான் சொல்லிகிட்டேன்.

kuma36 said...

//சந்ரு said...
கவிதை எழுத வருதானு ஒரு முயற்சி ஆனா வர மாட்டேங்குதே!!

ஹா ஹா சிரிப்பா இருக்கு கவிதை எழுதுவதற்கான முயற்சி என்று சொல்றது சும்மா சொல்லக்குடாது கவிதை ரொம்ப நல்லா இருக்கு.......///

வாங்க சந்ரு முதல் வருகைனு நினைகிறேன். மிக்க நன்றி!

ஒரு ஒற்றுமைய பாருங்க இப்பதான் உங்க வலைப்ப்திவை வாசித்துவிட்டு இங்கு வந்து பார்த்தால் நீங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிங்க.இன்னும் கொஞ்சம் வாசிக்க இருக்கு உங்க பதிவில் முடிந்த பிறகு பின்னூடம்.

ஆதவா said...

உண்மையிலேயே ஷீ-நிசிக்கு அடுத்தது நாந்தான் பின்னூட்டமிட்டேன்... ஆனால் வந்து சேரவில்லை (ப்ளாக்கர் ஒழிக)

ஆதவா said...

அழகான காதல் கவிதை!

அமைதி - அதிர்வு!! முரண்கள் கலக்கும் இன்பக்குழம்பு!!

ஒரு பெண் நம்மைக் கடந்து போனால் ஏற்படும் உணர்வை அழகாக வரிகளாக சொல்லியிருக்கீங்க.. (இது நம்மைப் போன்ற இளம் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்..ஹி ஹி)

ஹேமா said...

குட்டிக் கவிதையில் காதல் கொட்டிக்
க(கி)டக்குது !

//ஆதவா...ஒரு பெண் நம்மைக் கடந்து போனால் ஏற்படும் உணர்வை அழகாக வரிகளாக சொல்லியிருக்கீங்க.. (இது நம்மைப் போன்ற இளம் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்..ஹி ஹி)//

ம்ம்ம்....என்னமோ நடக்கட்டும் நடக்கட்டும்.

kuma36 said...

//ஆதவா said...
உண்மையிலேயே ஷீ-நிசிக்கு அடுத்தது நாந்தான் பின்னூட்டமிட்டேன்... ஆனால் வந்து சேரவில்லை (ப்ளாக்கர் ஒழிக)//

வாங்க ஆதவா உங்களுடைய பின்னூட்டத்ததை தாமதமாக்கிய பிளக்கர் ஒழிக!

kuma36 said...

//ஹேமா said...
குட்டிக் கவிதையில் காதல் கொட்டிக்
க(கி)டக்குது !//

வாங்க ஹேமா அக்கா!

ம்ம்ம்....என்னமோ நடக்கட்டும் நடக்கட்டும்.

என்னத நடக்க போகுது

தமிழ் மதுரம் said...
This comment has been removed by the author.
தமிழ் மதுரம் said...

கமல் said...
ஆச்சரியம்!
அதி வேக‌
ரயிலொன்று
கடந்து போன‌
தண்டவாளம் போல்
இன்னும்
அதிர்கிறது
என்
இதயம்//


கவிதை அனுபவத் தெளிவு....
நல்ல சொல்லாடல்....

SASee said...

பாதையில் போன பதைபதைப்பு
மனதுக்கு வந்துவிட்டதே ...!

கலை உண்மையிலே நடந்ததா?

.