கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, March 15, 2009

தந்தைக்கு ஒரு தாலாட்டு

கவிஞ்சர் மு.மேத்தா அவர்களின் "இதயத்தில் நாற்காலி" என்ற நூலில் தந்தைக்கு ஒரு தாலாட்டு என்ற கவிதையை படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களாகவே இந்த கவிதயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். நேரம் இதோ வந்து விட்டது. நான் இரசித்த கவி நீங்களும் இரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...

தந்தைக்கு ஒரு தாலாட்டு

துருதுருத்த கவலைகளில்
தூக்கமில்லா இரவுகளில்
தவிதவிக்கும் தந்தையே!
நான்
தாலாட்டுப் பாடட்டுமா?

ஓய்வெடுக்க மனமின்றி
உழைப்பதற்கும் வழியின்றி
பாய் வெறுத்த தந்தையே
நான்
பாட்டொன்று பாடட்டுமா?

நீதியின் பாதையிலே
நெடும் பயணம் நடத்தியதால்
பாதியாய் ஆனவரே
நான்
பாராட்டுக் கூறட்டுமா..?

தேரோடும் கனவுகளைத்
தெருவேடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே
நான்
புகழ்மாலை போடட்டுமா...?

ஒன்பதாம் வயது முதல்
உருகியதை அறியாத‌
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான்
மேடை கட்டிப் பேசட்டுமா?

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் உன்னைத்
தட்டிக் கொடுப்பதற்கு
நான்
சந்திரனை அனுப்புகிறேன்!

உன் கண்ணை மூடி நீ
ஓய்வெடுப்பாய் சிறுநேரம் நீ
தூங்கி விழித்தவுடன்
நான்
சூரியனை அனுப்புகிறேன்!

பூமி உனக்களித்த‌
புழுக்கத்தை நீ மறந்து
கண் துயில்வாய் சிறு நேரம்
நான்
காற்றை அனுப்புகிறேன்!

வாழ்க்கை உனக்குச் செய்த‌
வஞ்சகத்தை நீ மறந்து
சிறுபொழுது கண்ணயர்வாய்
நான்
தென்றலை அனுப்புகிறேன்!

விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்! வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான்
அப்படியே அனுப்புகிறேன்!

மு.மேத்தா
நூல்:இதயத்தில் நாற்காலி


15 comments:

ஆதவா said...

நன்றாக இருக்கிறது... பகிர்தலுக்கு நன்றி சார்.

மிளகுக்கவிகள் என்ற பெயரில் நான் அப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறேன். என் வலையில் சீக்கிரமே தருகிறேன்

மேத்தா தானே!!! அதான் கவிதையின் இனிமை தெரிககறது..

தமிழ் மதுரம் said...

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் உன்னைத்
தட்டிக் கொடுப்பதற்கு
நான்
சந்திரனை அனுப்புகிறேன்!//


பகிர்தலுக்கு நன்றிகள் கலை....


மேற்கண்ட வரிகளில் கவிஞரின் கற்பனை அபரிமிதம்....!

geevanathy said...

///தேரோடும் கனவுகளைத்
தெருவேடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே///

பகிர்தலுக்கு நன்றிகள் கலை....

தர்ஷன் said...

நம்மூர்ல எல்லாம் இப்படி பாடி தூங்க வைக்கிற நிலைமையிலா தந்தைகள் இருக்காங்க
அவர்கள்தான் கசிப்பு உபயத்தால் நன்றாக தூங்குகிறார்களே மற்றவர் தூக்கத்தை கெடுத்து விட்டு

Hisham Mohamed - هشام said...

என்றோ படித்ததை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி கலை

kuma36 said...

என்னோடு சேர்ந்து கவிதையை இரசித்த அனைவருக்கும் நன்றி!!

kuma36 said...

//Hisham Mohamed - هشام said...

என்றோ படித்ததை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி கலை//

அடடா முதல் முதலா பின்னூட்டம் இட்டிருக்கிங்களே! ஏன் இன்று வேளை குறைவா? ரொம்ப சந்தோஷம்.
நன்றி.

kuma36 said...

//தர்ஷன் said...

நம்மூர்ல எல்லாம் இப்படி பாடி தூங்க வைக்கிற நிலைமையிலா தந்தைகள் இருக்காங்க
அவர்கள்தான் கசிப்பு உபயத்தால் நன்றாக தூங்குகிறார்களே மற்றவர் தூக்கத்தை கெடுத்து விட்டு//

நீங்க சொல்லுறதும் சரிதான் சார், ஆனா குடிக்காத தந்தைகளும் உண்டுலில்லையா! அவங்களுக்கு பாடுவோமே! ஓகேவா?

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...

SASee said...

//விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்! வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான்
அப்படியே அனுப்புகிறேன்!//

கலை நன்றாய் இருந்தது கவிதை

அழகான உருக்கமான கவிதை

தந்தமைக்கு நன்றி

Anonymous said...

ஒன்பதாம் வயது முதல்
உருகியதை அறியாத‌
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான்
மேடை கட்டிப் பேசட்டுமா?////


ரொம்ப அழகான வரிகளிவை...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

ஹேமா said...

//பூமி உனக்களித்த‌
புழுக்கத்தை நீ மறந்து
கண் துயில்வாய் சிறு நேரம்
நான்
காற்றை அனுப்புகிறேன்!//

அருமையான இயல்பான வார்த்தைகளைத்தான் மெருகூட்டி
யிருக்கிறார் மேத்தா அவர்கள்.
என்றாலும் வரிகள் எவ்வளவு அழகாய் கோர்க்கப்பட்டிருக்கிறது.
எங்களையும் ரசிக்க வைதமைக்கு நன்றி கலை.

Prapa said...

வணக்கம் கலை , அப்பாவுக்கு தலாட்டு ........ ரொம்ப நன்றி நேர காலத்திற்கு ரொம்ப பொருத்தம்.

தமிழ் மதுரம் said...

தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் என் அன்புத் தோழர்களாக

1)மலையகம் பற்றி மகத்தான பதிவிடும் நண்பன் ‘கலை இராகலை’


2)பழைய பாடல்களினூடே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரி ‘’சாந்தி’’



3)கடலேறிப் பல்கலை போகும் நண்பன் ‘’ஆதிரை’’!



இவர்கள் யாவரும் என்னைப் போல் அல்லாது மிக மிக வேகமாக ஆடுகளத்தில் அடித்தாடுவார்கள் என்ற நம்பிக்கையில் களம் இறக்குகின்றேன்

Earn Staying Home said...

நன்று.

.