கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, March 19, 2009

ஆர்தர் சி கிளார்க் நினைவு தினம் (19.03.2009)















(
Sir Arthur Charles Clarke, 16.12.1917 - 19.03.2008)
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆர்தர் சி கிளார்க் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து குடியுரிமையைப் பெற்ற அவர், தனது இறுதிக்காலம் வரை இலங்கையிலே வாழ்ந்து வந்தார்.

2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' மூலம்
அதிகளவுக்கு பிரபல்யம் பெற்ற ஆர்தர் சி கிளார்க் இங்கிலாந்தில் 1917 டிசம்பர் 16 இல் பிறந்தவர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராக பணிபுரிந்தார். தொடர்பாடல்களுக்கு பூமியை சுற்றிவரும் செய்மதிகளை உபயோகப்படுத்த முடியுமென முதலில் கருத்தினை முன்வைத்தவர்களில் கிளார்க்கும் ஒருவராவார். மனிதனால் சந்திரனுக்கு செல்ல முடியுமென்று 1940 களில் எதிர்வு கூறியவர் ஆர்தர் சி கிளார்க். அச்சமயம் இதனை உபயோகமற்ற கதையென சிந்தனையாளர்கள் நிராகரித்திருந்தனர்.

1969 இல் நீல் ஆம்ஸ் ரோங் சந்திரனில் இறங்கியபோது, கிளார்க்கின் புத்தி ஜீவித்தனமான வழிகாட்டுதலே சந்திரனுக்கு செல்வதற்கு தம்மை வழிநடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆர்தர் சி கிளார்க் சுமார் 100 புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அநேகமாக எழுத்தாளர் என்றே அவர் நினைவு கூரப்பட்டார்.

விஞ்ஞானப்புனைகதைகளிலும் பார்க்க பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி(2001: A space odyssey) அவருக்கு அதிக புகழை ஈட்டிக் கொடுத்தது.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்பதே தனது விருப்பம் என தனது இறுதி பிறந்த தினத்தை கொண்டாடிய போது அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் ஆர்தர் சி கிளார்க்ப்பற்றி படிக்க..


8 comments:

ஆதவா said...

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது எழுத்துக்கள் அகிலமெங்கும் நிறைந்திருக்கும்..

ஆதவா said...

அவர் இறந்த தினத்தை நீங்கள் குறிப்பிடவில்லை.... கவனியுங்களேன்.

kuma36 said...

//ஆதவா said...
அவர் இறந்த தினத்தை நீங்கள் குறிப்பிடவில்லை.... கவனியுங்களேன்.//

வாங்க ஆதவா சரி தினத்தை குறிப்பிட்டு விட்டேன்.

நினைவு தினம் இன்று எனும் போது இறந்த தினமும் அதுதானே!

(Sir Arthur Charles Clarke, 16.12.1917 - 19.03.2008)

Anonymous said...

இந்த சம்பவம் சம்பவம் ங்கிறீங்களே.. மன்னிக்கவும் சொல்லு தடுமாறிப் போச்சு... ஏ ஸ்பேஸ் ஒடிசி' ஏ ஸ்பேஸ் ஒடிசி' ங்கிறீங்களே அது என்னண்ணு இந்த முட்டாப்பசலுக்கு சொல்லியிருந்தா தேவலை.. அது ஏதும் நடனவகையா...

அது என்னதுன்னு எழுதணும் பாஸ்...

ஹேமா said...

கலை உண்மை நிலவரம் அறிபவர்கள் யாருமே இலங்கையில் அமைதி வேண்டித்தான் பிரார்த்திப்பார்கள்.
முட்டாள் முரடர்களைத் தவிர.எங்களை நேசிக்கும் வெள்ளை உள்ளங்கள் நிறையவே இருக்கிறார்கள்.

எங்கள் நினைவோடு தன் நினைவை விட்ட ஆர்தர் சி கிளார்க் அவரை என்றும் நினைவில் கொள்வோம்.

தமிழ் மதுரம் said...

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்பதே தனது விருப்பம் என தனது இறுதி பிறந்த தினத்தை கொண்டாடிய போது அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது//


இது தான் அனைவரினதும் விருப்பம்... வரலாற்று மீட்டல் அருமை...

தமிழ் மதுரம் said...

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்பதே தனது விருப்பம் என தனது இறுதி பிறந்த தினத்தை கொண்டாடிய போது அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது//


இது தான் அனைவரினதும் விருப்பம்... வரலாற்று மீட்டல் அருமை...

SASee said...

நல்ல தொரு பதிவு
நல்ல மனிதர்களின் வரலாறு
முடியுமெனில் தொடருந்து தாருங்கள்

.