கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, April 8, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்/ கவிழ்த்தவர்கள்..!

பெரிய பதிவாயிருக்குனு நினைத்து வாசிக்காம போயிடாதிங்க. நேரம் கிடைக்கும் போது அமைதியாய் கொஞம் கொஞ்சமா வாசித்து முடித்துவிடுங்க!
மார்ச் மாதம் 17ம் திகதி என்னை (என்னைக் கவர்ந்தவர்கள்/ கவிழ்த்தவர்கள்..!) ஒரு தொடர் பதிவிற்கு நண்பர் கமல் அழைத்திருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் "மிக மிக வேகமாக ஆடுகளத்தில் அடித்தாடுவார்கள்" என கமல் சொல்லியிருந்தார்.ராகுல் ட்ராவிட் வேகத்தில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் அதைப்பின்பற்றி ஆடுகளத்தில் இப்போது நான்!(தான் உண்டு தன் வேளை உண்டு என நீயுசிலாந்தில் சாதனைப்படைத்து கொண்டிருக்கும் அந்த நல்ல மனுசனை ஏன்டா இங்க இலுக்கிறனு கேக்குறது விளங்குது)
மகாகவி பாரதியை பி(ப)டிக்காதவங்களே இருக்க முடியாதுங்க‌ (யாரும் இருப்பாங்களோ?) அவரைப்பற்றி எழுத இன்னும் வளர வேண்டும்னு நினைக்கிறோன் (அறிவை சொல்லுறேன் மற்றப்படி 5"9" உயரம் நான்)பாரதியைப்பற்றி ஆதவா எழுதியிக்காரு ஓடி போய் வாசிங்களேன் அவருதான் சரியான ஆளு பாரதியைபப்ற்றி எழுத! பாரதியின் கவிதைகளில் இந்த வரிகள் எனக்கு பல‌ம் சேர்த்தவைகள்!
"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" இதை வாசிக்கும் போதே புது உத்வேகம் பிறக்கும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

சரி அடுத்தவர் விவேகானந்தர் ரொம்ப பிடிச்சவரு பாரதிமாதிரியே முண்டாசு கட்டியிருப்பாரு, சுவாமி விவேகானந்தரின் அமுத மொழிகளில் இவை எனக்கு மிக மிக பிடித்தவை

"வாய்ப்பு வரும் வரை அமைதியாய் இரு அது அமைந்து விட்டால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" ,

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்" .

சரி விவேகானந்தர்ப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்றால் முத்திக்கொண்டார் நண்பர் நிர்ஷன் நானும் ஏற்கனவே ஒரு குறிப்பு பதிவு செய்திருக்கின்றேன். பாரதிப்பற்றியும் தான்.

பிறகு கவியரசு, கவிபேரரசு, என்று இன்னும் நிரைய பேரு இருக்காங்க. அதோடு கவிஞர் புதுவை இரத்தினதுரை! அவர்களின் கவிதைகள் மிகவும் பிடித்தவை. அவருடைய குரலில் அவருடைய கவிதைகளை நான் கேட்டு இருக்க வில்லை நண்பர் கமலின் பதிவுகளை பார்ப்பதற்கு முன்பு. அவரது கவிதைகளை அவரின் குரலிலே ஒலிவடிவில் உங்களுக்கு கேட்க வேண்டுமா? இதோ இங்கே கிடைக்கிறது! ஓடி போங்க கேட்டுவிட்டடு மறுபடியும் இங்கே வாங்க ப்லீஸ்! கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று தமிழ் மதுரம் கமலின் பதிவில் சுட்டதுங்கோ!!

(ஒலி வடிவிலும் உண்டு இங்கே)

வெள்ளிக் கிழமை விடிந்தாலே போதும் சொல்லி மாளாத சுகம் எல்லோரும் விரதம் ஏழெட்டுக் கறி சோறு குறட்டையுடன் ஒரு குட்டித் தூக்கம் கோயில் மணி கேட்கக் கும்பிட்டு எழுந்து காலாற ஒரு தடவை கடைப் பக்கம் உலாத்தல்
குளத்தடிப் பிள்ளையாரப்பா
டேய் கொழுக்கட்டை தின்னி
எல்லாம் முடிஞ்சுதா ஐயனே???
இனி என்று அழியும் இத் துயர்??
ஊர் திரும்பல் எப்போது?
வீடு இழந்ததற்கே எனக்கு இந்தளவ வில்லங்கம் என்றால்
நாடிழந்து போனது எந்தப் பெரிய இழப்பு???

பிறகு எனது ஆரம்ப கால ஆசிரியை ஜெசிமா உமா டீச்சர், என் தமிழாசிரியான‌ , 10 11 ஆம் ஆண்டு பாடசாலைப்படிக்கும் போது வகுப்பாசிரியைய் இருந்த சாந்தினி டீச்சர், உயர்தரத்தின் போது வகுப்பாசிரியர் பன்னீர் சேர் என்று இன்னும் பெரிய பட்டியலே இருக்கு. அப்பப்போ ஒவ்வொருத்தரையும் பற்றி கொஞ்சமாவது சொல்லனும் என நினைத்திருக்கின்றேன்.
இப்ப நான் இங்கு எழுத போவது தான் இன்றைய பதிவு 
கோ. நடேசய்யர்.

இலங்கை அரசியலில், தொழிற்சங்கம், பத்திரிக்கை, இலக்கிய முயற்சிகளில் ஈடுப்பட்டவர் தான் கோதண்டராம நடேசய்யர். தமிழகத்தின் தஞ்சாவூரில் 14.01.1891 ம் ஆண்டு பிறந்தவர்.தஞ்சாவூரில் இந்திய வியாபாரிகள் சங்கம் ஒன்றினை உருவாக்கி வெற்றிகரமாக இயக்கிவந்தவர். அதே நேரம் வர்த்தக மித்திரன் என்ற பத்திரிக்கையையும் நடாத்தி வந்தார்.இந்தியர்கள் கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட அந்நாட்களில் கொழும்பில் அதன் கிளையொன்றையும் நிறுவியிருந்தார். அதன் ஆண்டு விழாவிற்காகவே 1915ம் ஆண்டு முதல் முதலாக இவரது இலங்கைக்கான வருகை அமைந்திருந்தது. அந்த வருகையின் போது கோ.நடேசய்யர் தேயிலை தோட்டங்களில் வாழுகின்ற இந்தியத் தொழிலாளர்களின் நிலமையை நேரில் கண்டறிய விருப்பினார். ஆனால் அவருக்கு அங்கு சென்று பார்க்கமுடியாதவாறு சட்டங்கள் கடுமையாக இருந்தது. அதாவது தேயிலை தோட்ட்ங்கள் யாவும் துரைமார்களின் பலத்த அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. தோட்டத்துக்குள்ளிருப்பவர்கள் தோட்ட எல்லையை தாண்டி வெளியே போவதும் வெளியார் தோட்டங்களுக்குள் வருவதும் சேவை ஒப்பந்தக் கட்டளைச்சட்டம், அத்துமீறல் தடைச்சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் தண்டணைக்குரிய குற்றங்களாக இருந்தது. புடவை வியாபாரிகள் மாத்திரம் செல்வது வழக்கமாயிருந்திருக்கிறது எனவே கோ.நடேசய்யர் புடவை வியாபாரியாக‌ உள்ளே சென்று மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அம்மக்கள் திறந்தவெளிச் சிறை வாழ்க்கையை அறிந்து கொண்ட அவர் ஆண்டு விழாவை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.
இலங்கையில் குடியியல் உரிமை அற்றிருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்த மக்கள் பிறந்து வளர்ந்த தாயகமான இந்திய அரசு எவ்வித முன்னெனடுப்புகளையோ, இராஜதந்திர அழுத்தங்களையோ மேற்கொள்ள வில்லை அதேவேளை புகுந்த வீடான இலங்கை அரசும் எவ்வித அக்கறையும் காட்டாத வேளையிலே இம்மக்களின் விடியலுக்காக நீண்ட காலம் த‌ங்கியிருந்து பாடுப்பட வேண்டும் என்ற நோக்குடன் மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த அவர் அவ்ருக்கு நன்கு பரிட்சயமான பத்திரிக்கை தொழிலில் ஈடுப்படலானார். 1922 ம் ஆண்டு, "தேசநேசன்" என்ற தினசரியும், 1924ம் ஆண்டு "தேசபக்தன்" என்ற தினசரியும் அவரால் தொடங்கப்பட்டது. அதே வேளை தனி ஆங்கிலப் பத்திரிகைகளான Indian opinion, Indian Easte Labourer citizen, Forward ஆகிய மூன்று பத்திரிக்கைகளையும் நடாத்தினார். 1947 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சுதந்திரன் பத்திரிக்கை அரசியல தினசரியாக வெளிவந்தபோது அதன் ஆசிரியராக கோ.நடேசய்யர் கடமையாற்றிவுள்ளார். பத்திரிக்கையின் நோக்கம் பற்றிய செய்தியினை மிகத் தெளிவாக அதன் முதலாவது இதழிலேயே கீழ்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
"தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கை தமிழர் என்கிறார்கள். பின் வந்த வந்தவர்களை இந்திய தழிழர்கள் என்கிறார்கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்து விட்டனர். இந்தியத் தமிழர்களில் சிலர் தங்களை இந்தியன் என கூறிக்கொள்வதில் தங்களுக்கு ஏதோ பிரத்தியோக நன்மை இருப்பதாகவும் கனவு காண்கிறார்கள். இந்த பிரிவினைகள் யாரால் ஏற்படுத்தப்பட்டதென்பதை அறிவாறா? இவ்விரு தமிழர்களையும் பிரித்து வைப்பதில் தங்களுக்கு பயன் ஏற்படும் என சிங்களச் சோதரர்கள் செய்துவந்துள்ள சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியிலீடுப்பட்டுள்ள சில சுயநலத் தமிழர்களும் இருக்கின்றனர். ஆகவே இந்தச் சூழ்ச்சிகாரர்களிடமிருந்து தமிழ் பொதுமக்கள் தப்பவேண்டும்.இந்த ஒரே நோக்கம் கொண்டுதான் சுதந்திரன் ஆரம்பிக்கப்பெற்றிருக்கிறது. சாதாரண மக்களிடம் அரசியல் ஞானத்தை பரப்ப வேண்டியது முதல் கடமையாகும்."
01.06.1947 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் 1983ம் ஆண்டு தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது என்பது குறிப்பிடதக்கது. தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ. குணசிங்காவுடன் இணைந்து கொழும்பில் தொழிற்சங்க பணிகளில் ஈடுப்படலானார். ஏ.ஈ குணசிங்காவின் இந்தியத்துவேசம் இனவாத போக்கின் காரணமாக கருத்துவேருபாடுகள் கொண்டு 1928 ஆம் ஆண்டு அவ் அமைப்பை விட்டு வெளியேறினார். இலங்கை தொழிலாளர் கழகத்திலிருந்து வெளியேறிய கோ.நடேசய்யர் அவர்களின் 1931ம் ஆண்டு அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்ததிலிருந்துதான் மலையக தொழிற்சங்க வரலாறு தொடங்குகிறது! அதற்கு முன்னர் 1930 வரையில் தோட்டதுறையில் எந்த வித தொழிற்சங்க நடவடிக்கைகள் இருக்கவில்லை. ஆகவே தான் மலையகப் பெருருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களுக்காக அமைப்பு ரீதியாக முதலாவதாக‌ தொழிற்சங்கத்தை ஆரம்பித்தவராக கோ. நடேசய்யர் கருதப்படுகிறார்.
1936 ஆம் ஆண்டு நடந்த அரசாங்க சபை தேர்தலில் கோ.நடேசய்யர் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்றார்.ஆறு ஆண்டுகள் சட்ட நிறுவன சபையினதும், அதன் பின்னர் பதினொறு ஆண்டுகள் சட்டசபையிலும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக பிரதிநிதிதுவம் செய்தார்.
ோ.நடேசய்யர் இலங்கையில் குடியேறியது முதல் மறையும் வரை ஒன்பது தழிழ் நூல்களயும் இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார். "தோட்ட் முதலாளிகள் இராச்சியம்" என்ற இவரது ஆங்கில நூல் மிகவும் பிரபல்யமானது என கூறப்படுகிறது. அதே சமயம் இவரது மனைவியான மீனாட்சியம்மை இவருது அரசியல், இலக்கிய வாழ்விற்கு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.இவர் தான் ம்லைகத்தின் முதற்பெண்மணியாகவும் கூறப்படுகிறது. மீனாட்சியம்மையைப்பற்றி வேறொரு பதிவில் முழுமையான விபரங்களை தருகிறேன்.
கோ. நடேசய்யரின் நூல்லகள் யாவும் உறங்கிக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தட்டியெழுப்பும் போக்கிலே காணப்படுகிறது. "1931ம் ஆண்டு வெளியான "நீ மயங்குவதேன்" என்ற கட்டுரை நூலில் உள்ள இறுதி கட்டுரையான "ராமசாமி வேர்வையின் ச‌ரிதம்" என்ற கட்டுரையாகவல்லாது மலையகத்தின் முதன் முதலில் வெளிவந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது.
இன்னும் ஏராளமான விடயங்கள் நடேசய்யர்ப் பற்றி இருக்கின்றன அவை இன்னொறு முறை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகிறேன். மக்களுக்காக பாடுப்பட்டவர்களின் வரலாறு இலகுவில் சொல்லி முடிக்கயிலாத காரியம் என்பது நீங்க அறிவீர்கள். இன்னொரு விடயம் 06.11.1947 நடேசய்யர் கொழும்பில் அமரரானார். அவர் அமரராகி ஒரு வருடம் கழித்த நிலையில் மலையக மக்களின் அரசியல் வாழ்வினை அழித்தொழிக்க வகை செய்த குடியுரிமை சட்டம் 15.11.1948இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அரங்கேறியது என்றால் எவ்வளவு நெருக்கடியாக அரசிற்கு அமரர் கோ.நடேசய்யர் இருதிருப்பார் என நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
இன்றிலிருந்து ஒருவாரகாலமாக வலைப்பதிவிற்கு விடுமுறை கொடுக்கலாம் என் எண்ணியுள்ளேன். இடைக்கிடையில் உங்களை சந்திக்கின்றேன். ஒரு வருடத்தின் பின் வீட்டுக்கு சொல்வதால் சிறு ஓய்வு எடுத்துவிட்டு நண்பர்கள், உறவினர்கள் சந்தித்து விட்டு மீண்டு பல சுவாரஸ்யமான விடயங்களோடு தியானத்தின் 3வது பதிவின் ஊடாக உங்களை சந்திக்கிறேன். வடக்கின் வசந்தம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர் எது எப்படியோ ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் சித்திரை வருட பிறப்பில் வசந்தம் வீசட்டும் என எப்போதும் போல இறைவனை பிரார்த்திப்போம் என கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன்.
எனது மனமார்ந்த நன்றிகள் இவர்களுக்கு
பட உதவி திரு.அந்தனி ஜிவா (எழுத்தாளர்)
உதவி நூல்கள் : மலையக இலக்கிய கர்த்தாக்கள், மலையகத் தொழிற்சங்க வரலாறு
பின் குறிப்பு: இந்த பதிவில் மற்றுமொருவர் இருக்கின்றார் அவரைப்பற்றிய தகவல்களை தந்து விட்டு மூன்று பேரை தொடர்பதிவிற்கு அழைகின்றேன்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னூட்டம் போடுங்க! நட்புடன் ஜமால் அண்ணே சாதனையை முறியடிக்க தேவையில்லை. கொஞ்சமாகவே பின்னுட்டம் போடுங்க ப்பீஸ்.

31 comments:

Suresh said...

அருமையான பதிவு

ஆதவா கவிதையும் உங்கள் மற்றும் நிர்ஷன் கவியும் படித்தேன்... லோஷன் பற்றியும் அறிய ஒரு வாய்பு கிடைத்தது

Suresh said...

//இன்றிலிருந்து ஒருவாரகாலமாக வலைப்பதிவிற்கு விடுமுறை கொடுக்கலாம் என் எண்ணியுள்ளேன்/

why ?

Already leave la than irunthna mathiri iruku ( kadaila )

Suresh said...

//ஒரு வருடத்தின் பின் வீட்டுக்கு சொல்வதால் சிறு ஓய்வு எடுத்துவிட்டு நண்பர்கள், உறவினர்களை சந்தித்து விட்டு மீண்டு பல சுவாரஸ்யமான விடயங்களோடு தியானத்தின் 3வது பதிவின் ஊடாக உங்களை சந்திக்கிறேன்.//

Ok ok enjoy panunga all the best will wait for ur post

Suresh said...

//நட்புடன் ஜமால் அண்ணே சாதனையை முறியடிக்க தேவையில்லை. /

cycle gap la ha ha auto otitinga ha ha

ஆ.சுதா said...

பின்னாடி வரேன்..

குடந்தை அன்புமணி said...

இந்த ஒரு வார காலத்திற்குமாக சேர்த்து இந்த பதிவா? அம்மாடி! நடேசய்யர் பற்றி முதன் முதலாய் தெரிந்து கொள்கிறேன். நல்ல பதிவு நண்பா! தங்கள் அறிமுகப்படுத்தியவர்களை அப்புறம் வந்து படித்துக் கொள்கிறேன். வீட்டுக்குபோய் புதுத்தொம்போடு வாங்க, காத்திருக்கிறோம்!

Anonymous said...

நல்ல பகிர்வு..!
சுட்டி கொடுத்திருப்பவையும் நல்ல பதிவுகள்!
லோசன் அண்ணா எல்லோருக்குமே பிடித்தவர்!
ஊரினில் நல்ல அனுபவங்களோடு விரைவாக வாருங்கள்!

ஆ.ஞானசேகரன் said...

பலர் பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது.. நன்றிபா

SASee said...

கலை பாதிப் படிச்சாசு
மீதியையும் படிச்சுட்டு
கருத்துரை தருகிறேன்...

ARV Loshan said...

கொஞ்சமில்லை. ரொம்பவே பெரிய பதிவு தான்.. ஆனால் முழுக்கப் படித்தேன்..

எனக்குப் பிடித்த பாரதி பற்றியும், எனைப் பிடித்ததாகவும் எழுதியதற்கு நன்றிகள் கலை..
//இப்போதெல்லாம் நம்ம வலைப்பக்கம் வருவதேயில்லை //
அப்படி கவலைப்பட வேண்டாம் கலை.. பின்னூட்டம் போடாவிட்டாலும் கூட ஒவ்வொரு நாளும் இல்லையென்றாலும், நீங்கள் புதிய பதிவுகள் இடும்போதெல்லாம் படித்து விட்டுப் போகிறேன்..

புதுவை பற்றி சொன்னதும் பெருமை..

உங்கள் சிறு பராய நினைவுகள் :)

விடுமுறைக்கு ஊருக்கா? சந்தோஷமா அனுபவியுங்கள்.. (விடியலுக்கு எப்படியும் வருவீங்க தானே)

ஆ.சுதா said...

முன்பாதியில் உங்கள் நினைவுfகள் ததும்புகின்றது. நல்ல பகிர்வு,
உங்கள் அறிமுகம் பதிவுகள் நன்று.
கோ.நடேசய்யர் பற்றி விரிவ்வாக எழுதிருக்கீங்க கொஞ்சதான் படித்திருக்கேன் மீதியை அப்புறம் படிக்கரேன்.
நல்ல பதிவு,

தேவன் மாயம் said...

நினைவோடையிலிருந்து நீங்கள் தொகுத்து இருப்பவை அருமை..

ஆதவா said...

கவலைவேண்டாம் கலை.. பதிவு பெரியது என்று நினைப்பதேயில்லை. அதில் உள்ள அம்சங்கள் என்ன என்பதுபற்றிதான் பார்ப்பேன்.

விடுமுறையை நன்கு கழித்துவிட்டு தியானத்தோடு வாருங்கள்.

கோ. நடேசய்யர் இன் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள இப்பதிவு துணையாக இருக்கிறது. சிறிது மலையக வாழ்வைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்! அவரது கடிதத்தின் வீரியமும் நன்குணர்ந்தேன்!

லோஷனோடு அனுபவமும் இனிமை வாய்ந்தது.. எனக்கு இலங்கை நண்பர்கள் சொல்லித்தான் லோஷன் அவர்களைத் தெரியும்.. அவர் பல்வேறு தளங்களில் பயணிப்பவர். அவருடைய வலையையும் படித்துவருகிறேன்!!

நல்லப்டியா விடுமுறையைக் கழியுங்கள்.

திரும்பவும் பார்க்கும்
ஆதவா!!!

Subankan said...

அருமையான பதிவு அண்ணா, விடுமுறையை மகிழ்ச்சியாகக கழியுங்கள். அப்பாடா..முழுவதும் படித்துவிட்டேன்!

ஹேமா said...

கலை,ஆறுதலாகப் படிச்சேன்.பதிவு உஷாராக இருக்கு.படிக்கச் சோர்வு இல்லை.

ஓ...விடுமுறையா ஜாலிதான்.போய்ட்டு வாங்கோ.சுகமாய்ப் போய் வாங்கோ கலை.

தர்ஷன் said...

என்ன ஒரு வாரமா கடைக்கு லீவா?
லோஷன் அண்ணா உண்மையில் ஒரு பல்துறை விற்பன்னர்தான் தேடல் நிறைந்தவர்களை எனக்கும் நிறையப் பிடிக்கும் cricket,cinema,politics என அனைத்திலும் கொஞ்சம வைத்திருப்பார். நான் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பித்ததும் முதலில் follow செய்தது அவரைத்தான்

தமிழ் மதுரம் said...

கலை சுகமாய்ப் போய் வாங்கோ....


விரைவாகப் பதிவினை இட்டமைக்கு நன்றிகள்..



மனதில் பல வலிகள் என்பதால் ஆக்க பூர்வமான கருத்துக்களைச் சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும்...

சாந்தி நேசக்கரம் said...

கமலின் அழைப்பையேற்றுப் பரீட்சையில் வென்றுவிட்டீர்கள் கலை. கமல் சொன்னது போல நான் இன்னும் பதிவிடவில்லை.

தங்கள் பதிவு நன்றாகவுள்ளது. நேர்த்தியாக மிகவும் கவனமுடன் எழுதியுள்ளீர்கள்.

தொடர்பதிவு நல்லதொரு தொடக்கமாகவும் பயனுள்ள பல தகவல்கள் ஞாபகங்களின் சேமிப்பாகவும் இருக்கிறது.

சாந்தி

ஆ.ஞானசேகரன் said...

///நான் ரொம்ப நல்லவன்!!! அட ஆமங்க நம்புங்க!!///

நம்பிட்டேன் கலைகுமார்...

ஆ.ஞானசேகரன் said...

//தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கை தமிழர் என்கிறார்கள். பின் வந்த வந்தவர்களை இந்திய தழிழர்கள் என்கிறார்கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்து விட்டனர்.//

உண்மையான பிரச்சனையை சுலபமாக சொல்லிவிட்டீர்களே கலைகுமார்

SASee said...

கலை பாதி வாசித்ததாய் சொல்லி
மிதியையும் வாசித்தப்பின்னும்
கருத்துரை தராமல் இருக்க முடியுமா நண்பரே....

நல்லதோர் பதிவை மிக நீண்ட நாட்டகளாக வலையில் நீந்த விட்டுள்ளீர்கள். அருமையான பிடிப்பு, எனக்கும் பிடித்திருக்கிறது.
எமது துயரம், அதன் சூழ்ச்சி வேதனை தருகிறது.

இதனை யாரும் இனியும் திருத்துவார்கள் என்றால் பயனில்லை.

நாமே திருத்துவோம், திருந்துவோம்...!

Sinthu said...

நாங்க கொஞ்சப் பேர் இருக்கிறோம்... லோஷன் அண்ணாவுடன் தான் சூரியனுக்கே வந்தோம்... அதுக்கு முன்னால இல்லா...
ஊருக்கா? நால்லாவே இருப்பீங்க எண்டு நினைக்கிறேன்.. நாங்களும் போவோமில்ல....
இந்தப் பக்கம் வரவே நேரம் கிடைப்பதில்லை...

கிராமத்து பயல் said...

அண்ணே ரொம்ப நல்ல பதிவு. கொஞ்சம் பெரிசா தான் போச்சு ஆனா நல்லா இருக்கு

Prapa said...

nalla sugam , konjam neramaavathu vasiththu thirupthi konden kalai.

Sinthu said...

கலை அண்ணா, தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், ஊருக்குப் போய் வந்த சந்தோசத்துடன் எழுதிவிடுங்கள்..

Admin said...

உங்கள் பதிவு சூப்பர்...... தொடருங்கள்....

நண்பர்களே எனது வலைப்பதிவு மாயமானது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன் தொடருங்கள் எனது புதிய வலைப்பதிவை..

Admin said...

எனக்கு பிடித்த எனது அன்புக்குரிய லோசன் அண்ணாவை பற்றி எழுதி இருக்கிறிங்க நன்றி கலை.

அருமையான பதிவு தொடருங்கள்...

என்ன கொடும சார் said...

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இன்றைய பத்திரிகை – 4
இந்த நாளில் – 10
Jingles – 25
விளம்பரம் – 25
தலைப்பு – 1
பாடல்கள் - 30
நட்ஷத்திர பலன் - விரும்பினால்

செய்முறை...

மேலும் வாசிக்க கிளிக்குங்க http://eksaar.blogspot.com/

malar said...

ரொம்ப பெரிய பதிவு ....
பாரதி கவிதை பேஷ் பேஷ் ...ரொம்ப நன்னா இருக்கு ....
ஏற்கனவே கேட்டது படித்தது திகட்டவில்லை ...

பூச்சரம் said...

பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

sshathiesh said...

என்ன கலை ரொம்ப நாளாக காணவில்லை எங்கே போனீர்கள்.?

.