கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, March 30, 2009

மலையக நாட்டார் பாடல்கள்

மலையக நாட்டார் பாடல்களை கொஞ்சம் இங்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கின்றேன் நண்பர்களே
உங்கள் கருத்துக்கள் முக்கியம்.

மலையக நாட்டார் பாடல்கள் தமிழகத்திலிருந்து மக்கள் கூலிகலாக இலங்கைக்கு இடம் பெயர்ந்த போது அம்மக்கள் கொணர்ந்தவைகள் தான் இந்த நாட்டார் பாடல்கள். அம்மக்கள் இலங்கையில் பணிபுரியும் காலத்தில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட‌ அநீதிகள், இன்னல்களை வெளிப்படுத்தும் முகமாகவே அனேகமான மலையக நாட்டார் பாடல்கள் காணப்படும்.

இப்பாடல்கள் யாவும் எங்கும் எழுதப்பட்டவை அல்ல அவர்கள் வாழ்வோடு பின்னி பினைந்தவை என்றால் மிகையாகாது. இப்பாடல்களை அலைசிபார்தோமானல் அவர்களின் இன்னல்களும் அநீதிகள் , இவர்களுக்கு எத்தரப்பிடமிருந்து கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பது வெளிச்சமாகும்.

மலையக நாட்டார் பாடல்களில் பபூன் பாடல்கள், நாடகப் பாடல்கள், சமூக எழுச்சிப் பாடல்கள், வீதிப் பாடலகள், பஜனை பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கேலிப் பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் என ஏராளமான வகைகள் உண்டு.

1972 -‍‍ 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் (உள்நாட்டு உற்பத்தி) அதிகமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த விவசாய நிலமற்ற தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!


பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்

அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க‌
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க‌
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்

சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே

தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!

ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம‌
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம‌
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.

(அரிசியில்ல)

பின் குறிப்பு: மலைக நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவைகள் பேச்சு வழக்கு மொழியிலே காணப்படும். எழுதிவைக்கப்படாத காவியங்கள் நிலைப்பதற்கில்லை எனவே இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாகும்.

Sunday, March 29, 2009

பட்டாம் பூச்சி விருது யாரால், எப்போ, அறிமுகப்படுத்தப்பட்டது?


என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து என்னை ஊக்கப்படுத்தும் விதமாக எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கினார் நண்பர் ஷி‍-நிசி. அவருக்கு நன்றின்னு சொல்லி நட்பை தூரப்படுத்த விரும்பாவிட்டாலும் இப்போதைக்கு அதை தவிர வேறு வார்த்தை என்னிடம் இல்லையென்பதால் (ஆமா புதுசா இவரு வார்த்தை கண்டுப்பிடிக்க போறாறாம் அப்பிடினு கேக்க கூடாது) அவருக்கு எனது மன்மார்ந்த நன்றிகள்.

அட சத்தியமா விருது கொடுத்தார். நம்புங்கப்பா! நம்பமுடியலையா இதே அவருது படத்தின் மேல் ஒரு கிலிக் போடுங்க, போட்டாச்சா? நம்பிட்டிங்களா?. (ம்ம்ம் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு. முடியல!!!)
இவர்தாங்க தங்க மனசுகாரர்

இந்த பட்டாம்பூச்சி எப்படா நம்ம வீட்டுப்பக்கம் வருமென்று எவ்வளவு நாளா காத்திருந்தேன் தெரியுமா? இதே வந்துடுச்சி. எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கானு பேக்ரவுன்ட் மீயுசிக் போகுது! (அடப்பட்டாம் பூச்சி விருதை பாத்து பாடுனது! அதுக்குள்ள வீன் கற்பனை, அய்யோ அய்யோ..) சந்தோசமா இருக்கு.

இந்த வண்ணாத்திபூச்சி விருதை தந்த நண்பர் ஷி நிசி க்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை (ஒன்னே ஒன்னானு கேக்காதிங்க) என்வென்றால் நானும் வைரமுத்துவின் கவிப்பிரியன் அவரும்தான். காதல் கவிதைகள்,
சமூக கவிதைகள், குறுங்கவிதைகள், புகைப்பட கவிதைகள்,
உறவு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நட்பு இப்படி பலவகையாக பிரித்து கவிதைகளை அவருடைய வலைப்பூவில் தருகின்றார். கவிதைகள் சூப்பரா இருக்குமுங்க போய் வாசித்துப்பாருங்க!

சரி வலையுலக பட்டாம்பூச்சி விருதுகளின் விதிக்கு அமைய ( பட்டாம் பூச்சி விருது யாரால், எப்போ, அறிமுகப்படுத்தப்பட்டது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) நமக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு கொடுக்கனும். சரி நம்ம விருது கொடுத்தா யாரு வாங்குவானு ஒரு பயத்தோடு யோசித்து யோசித்து யோசித்து... (யோசித்தது போதும் நிப்பாட்டுனு சொல்லுறிங்களா?) சரி பட்டாம் பூச்சி விருதை இவர்களுக்கு நான் கொடுத்தா வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு முன் அறிவித்தல் இல்லாமலே அறிவித்துட்டேன்! நண்பர் கமல் (தமிழ் மதுரம்!), நண்பர் கவின் (கவின் பார்வையில்), நண்பர் ஸ்ரீதர்ஷன் ஆகியோருக்குதான்.

என்னது நண்பர்களே வாங்கி கொள்வீர்கள் தானே?


சரி முதலில் கமலைப்பற்றி பார்ப்போம் இவர் எனக்கு வலையுலகில் அதிக ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். அதோடு கமலின் பதிவுகளில் எதையுமே பிரித்து பாக்க முடியாதளவிற்கு எல்லாமே சூப்பரா இருக்கும்.
அரசியல் அலசல், ஒலி நயம், ஒளிக் கீற்றுக்கள், கவிதைக் கலசம்,
பல் சுவைக் கதம்பம், ஊர்ப் புதினம், என்ற பிரிவுகளில் கலக்கி இருபார்!

கமலின் ஒரு ஸ்பெசல் என்னவென்றால் குரல் பதிவு போடுவது தான். வலையுலக நண்பர்களுடன் இணைந்து பல்வேறு விடயங்களை அலசி ஒரு குரல் பதிவா தருவது. எதிர்கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கும்?? என்ற தலைப்பில் நண்பர் புல்லட்டுடனும், அப்புகுட்டியுடனும் இணைந்து ஒரு குரல் பதிவு சூப்பரா இருந்தது. கேட்டுப்பாருங்க! வளங்கொழித்த தமிழும் வழக்கொழிந்த தமிழும்..! தலைப்பில் ஹேமா அக்காவுடன் இணைந்து இன்னொரு பதிவு அதுவும் சூப்பர்.

நான் கட்ட(க்) கவுணொடு குட்டி ஒன்றைக் கண்டேன்..!, தேடலும் தெறிப்பும் . எரிகின்ற எனது நகரம்! (4) நக்கலும் நளினமும்! (02)
மறைந்திருக்கும் மர்மங்கள்...!
புதுமைகள் படைக்கும் புதுவையின் கவிதைகள்! பாகம் (04...

இப்படி இன்னும் ஏராளம் இருக்கு.

நன்றியுடன் வாழ்த்துக்கள் கமல்.



இன்னும் மீதமிருக்கின்றது வாழ்வின் இரகசியங்கள் எனும் தொடங்கும் கவினின் வலைப்பதிவு கவிதகள், காதல் கவிதைகள் என்று இரு பிரிவுகள் மட்டுமே இருந்தாலும் இன்னும் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அடிக்கடி பதிவுகள் போடாவிட்டாலும் போடுகின்ற பதிவுகள் சூப்பரா இருக்கும். எவ்வளவு சீரியஸ்சான் விஷயத்தையும் நகைச்சுவையாக தந்து சீரியஸாக்கிடுவார்.( நான் சொல்லுவது ஏதாவது புரிஞ்சதா, புரியாவிட்டால் உடனே கவினின் பார்வைக்கு போங்க புரியும்)

அடிக்கடி புது புது முகங்களுடன் வருவார் சின்ன குழந்தாயாய் சிரிந்து கொண்டுய்ருப்பார் திடிரென்று சீரியஸ்சான முகத்துடன் இருப்பார். இப்ப குழந்தையாய் தான் இருக்காரு, ஆனா பாருங்க கவினின் ஈ மெய்ல கடவுச்சொல்லை எந்தப்படும் பாவியோ திருடிவிட்டானாம், ம்ம்ம் எதை எதையெல்லாம் திருடுராங்க பாத்திங்களா?

கவினின் பதிவுகளில் பிடித்தது பல அவைகளில் சில‌

துர்தேவதைகளால் சபிக்கப்பட்டவர்கள்,

போராளிகள் பிறப்பதில்லை….

கண் எதிரில் ஒரு சோகம்

எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை பிடித்தவர்கள்

காதல், திருமணமும்

யாழ்பாணத்து இராத்திரிகள்(3)கண் எதிரில் ஒரு சோகம்

நன்றியுடன் வாழ்த்துக்கள் கவின்.



பெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன் என கூறிகொண்டு வலையுலகிற்கு நுழைந்தவர்தான் நம்ம நண்பர் தர்ஷன். இவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர்ங்க ( நமக்கு விஞ்ஞானம் எல்லாம் அலர்ஜிக்) இது அது என வகைப்படுத்தாமல் ஒரு மிக்ஸீங்க அண்மைகாலமாக கலக்கி வருகிறார். அதுலையும் சினிமாப்பற்றிய அலசல் சூப்பராகவே இருக்கும். சொதப்புவரா கமல் என்ற பதிவு விகடனிலும் சூப்பர் ஹிட்டானது! பெரியார் மேல் ரொம்ப பிரியமானவர் என நினைக்கின்றேன் அடிக்கடி பதிவுகளில் பெரியாரை ஞாபகப்படுத்துவார்.

பெண்ணியமும் பெரியாரும் என்ற தலைப்பில் மகளிர் தினத்தன்று ஒரு அருமையான ஆக்கம் இருந்தது, ஆனாலும் அன்மைகாலமாக சினிமாப்பற்றிய பதிவுகளினால் தான் அதிகமானோர் கண்களில்ப்பட்டிருக்கார் என்று சொன்னால் மிகையில்லை. ஆனால் அவருடைய பதிவுகளில் அதைவிட அழகான ஆக்கங்கள் பல் உள்ளன்.
தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம் என்ற தலைப்பில் ஒரு அருமாயான ஆக்கம் பதிவு செய்திருந்தார். பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்தாங்க நம்ம தர்ஷன்? என்ன தர்ஷன் நான் சொல்வது சரியா? ஏதாவது பிழையென்றால் பக்கத்துல உள்ளவருக்கு இழுத்து மூஞ்சில குத்திடுஙக . ஹா ஹா..

தர்ஷனின் பதிவுகளில் சில,
அம்மா தமிழனக் காப்பாத்தும்மா

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை

தமிழா தமிழா

ரஜினி the mass

சொதப்புவரா கமல்

கவிதை போல ஏதோ ஒன்று

தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம்


நன்றியுடன் வாழ்த்துக்கள் தர்ஷன்


பட்டாம்பூச்சி விருதின் விதிப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

அன்புடன்
கலை ‍- இராகலை




Thursday, March 26, 2009

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... (இலங்கை)

இன்று வீரகேசரி பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் உள்ள ஒரு படத்தை பார்த்த‌துமே நம்பவே முடியலங்க! ஷாக்காயிட்டேன்!

உலக நாடுகளோடு இலங்கையிலும் யுத்ததில் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு நிவாரண பொருட்களும் நிதிவுதவிகளும் சேகரித்து கொண்டிருக்கையில் மியன்மாரில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கிவுள்ளது, என புகைப்படத்துடன் ஒரு செய்தி. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பார்களே! ம்ம்ம்


சரி சந்தோசப்பட்டுக்கொண்டு பக்கங்களை திருப்பினா இடையில் சில புகைபடங்களுடன் ஒரு செய்தி. படங்கள் கீழே. படத்தின் மேல் சொடுக்கி கொஞ்ச‌ம் வாசித்து பாருங்களேன்.!!


நன்றி வீரகேசரி
http://www.virakesari.lk/VIRA/homeslide.asp



Wednesday, March 25, 2009

உருகியதே எனதுள்ளம்

இந்த சின்னக்குயிலின் குரலில் ஒரு தரம் நீங்களும் இப்பாடலை கேட்டுப்பாருங்களே!



மலர்களே மலர்களே இது என்ன கனவா?
மலைகளே மலைகளே இது என்ன நினைவா?
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா ஆ அஅஅ...
(மலர்களே..)

மேகம் திறந்துகொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்துக் கொள்ள வா வா

மார்பில் ஒளிந்துக் கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா!
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும் நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
(மலர்களே..)

பூவில் நாவிருந்தால்
காற்று வாய்திறந்தால்
காதல் காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..

மறக்காது உன் ராகம்
மரிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே..)

Tuesday, March 24, 2009

மீண்டும் விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!


தியானம் 2


தியானம் முதல் பகுதி இங்கே.....

தியானம் 2

தியானம் என்ற முதல் பகுதியை எழுதியதில் ரொம்ப திருப்தி, ஏன்னா அதுல ரொம்ப இட் கிடைச்சது, மட்டுமல்ல விகடனிலும் பிரசுரித்து மேலும் ஊக்கப்படுத்தியிருந்தாங்க. அதோட நம்ம நண்பர்கள் எல்லாமே பின்னுட்டம் மூலம் கொடுத்த ஊக்கத்தில் தைரியத்தில் இரண்டாவது பதிவு தொடர்கிறது. முதல் பதிவில் ஒரு சில விடயங்களை தெளிவுப்படுத்தவில்லை என்று அதை அழகா பின்னுட்டத்தில் எப்படி எழுதியிருக்க வேண்டும் என கூறியிருந்த நண்பருக்கும் (அறிவே தெய்வம்) நன்றியை சொல்லிக்கொண்டு நேரா பதிவுக்குள் போவோம்.

"தியானத்தின் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு மூன்று தரம் குறைவாகத் துடிக்கிறது. நமது மூளை, ஒரு நல்ல தூக்க நிலையின் போது உண்டாகும் "ஆல்பா" நிலையினை அடைகிறது.மின்சக்தியை எதிர்க்கும் சுமார் ஒரு மரத்து போன தோல் உணர்வு நிலை சுமார் நான்கு மடங்கு அதிகமாகிறது. மனிதர்கள் மிக அமைதி அடைந்தவர்களாகக் காண்ப்படிகிறார்கள் என ஹார்டுவர்டு மருத்துவ பேராசிரியர் பென்சன் கூறுகிறார்.

ஆகவே தியானத்தின் உண்மை தன்மையை (நன்மையை) விஞ்ஞான மூலமும்
தெளிவுப்படுத்துகிறார்கள். அதேபோல் அமெரிக்காவின் ஹார்டு வார்ட் பல்கலைக்கழகத்திலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பலரைத் தியானம் செய்ய கூறி அவர்களது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஆசனவாயின் வெப்பநிலை,தோலின் உண்ர்வு,மூளையின் மின் துடிப்பு முதலியவற்றை மருத்துவக் கருவி கொண்டு சோதித்தனர். தியானத்தின்போது நமது ஆக்சிஜன் தேவை குறைந்து அதே போல வெளிவரும் மூச்சில் கார்பனைட் ஆக்சைடின் அளவும் குறைந்தது. அதாவது மனிதன் நல்ல நினைவுடன் விழிப்பு நிலையில் இருக்கும் போது தியானம் செய்தவன் மூலம், தூக்க நிலையையும் கடந்து ஓர் உரிய ஓய்வை உடல் பூரணமாக அனுபவிக்கிறது என கண்டனறாம். நமது உடலின் உள்ளே நிகழும் உணவு மாறுபாடுகள், ரசாயன் மாற்றங்கள் எல்லாம் சுமார் 20 சதம் குறைகின்றன எனவும் அறிந்துள்ளனர். (இதற்கான ஆதாரம் தேடியும் கிடைக்க வில்லை யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.)

தியான‌த்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கின்ற போதிலும் யாருமே தானாய் முன் வந்து நாளுக்கு ஒரு 30 நிமிடம் சொலவு செய்ய விரும்பாமைக்கு காரணம் ஏதுவாயிருக்கும்? பொதுவாக நோக்கினோமானால் தியானத்திப்பற்றிய போதிய அறிவினை எந்த பாடசாலை புத்தகங்களிலும் வழங்காமை, தியானத்தை இந்து அல்லது பெளத்த மதம் சார்பானவை என பலரும் என்னுதல், அதோடு தியானத்தை மதம் சார்ந்த அமைப்புகள் கொண்டு நடாத்துவதையும் குறிப்பிடலாம். ஒரு நாளுக்கு 30 நிமிடம் நாம் தியானத்திற்கு சொலவிடுவதால் மீதி 23.5 மணித்தியாலம் நிம்மதியடையலாம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதோடு பாடசாலைகளில் இதற்கு நேரம் ஒதுக்கி பயிற்சியினை அழிப்பதன் மூலம் தியானத்தின் உண்மை நிலையினை பலரும் புரிந்துக்கொள்ள வழிவகுக்கலாம்.

"ஒரு நாட்டில் ஒரு சதவீத மக்கள் தியானம் செய்வதால் அந்நாட்டில் 10 சதவீத குற்றமும், களவும், கொலையும் குறையும்" என்று ஞானிகள் கூறுவர்.

தியானத்தை பின்ப்பற்ற‌ மதம் தேவையில்லை தியானத்தின் போது ஓம், சிவாய நம, யேசு, அல்லா, புத்தம் இப்படி எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.நம்மை நாமே அறிந்து கொள்ள, நம்மில் உள்ள சக்தியை உணர்ந்துக்கொள்ள ஒரு முறை தான் தியானம்.


தியானம் தொடரும்...


அறிவே தெய்வம் என்பவரால் விபஸ்ஸனா தியான முறை பற்றி தெரிந்துக்கொண்டேன் நீங்களும்...





Saturday, March 21, 2009

இலங்கையின் செங்கோல்


இதுதான் இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல்.நேர்த்திமிக்க அலங்கரிப்பும் புரதான வணக்கத்தலங்களின் வடிவமைப்பையும்,அலங்காரத்தினையும் கொண்டதாக இது காணப்படுகிறது.
அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் விழுமியங்களையும்,தத்துவ கோட்பாடுகளையும் குறிக்கும் நித்தியதன்மை,அழகு,பரிபூரண
சமாதானம்,நிரந்தரத் தன்மை,வளர்ச்சி, செழுமை,தூய்மை என்பவற்றின், அடையாளமாக இது திகழ்கிறது. செங்கோலானது பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரச்சின்னமாகவும் திகழ்வதால் பாராளுமன்றம் கூடும் போது செங்கோல் வைக்கப்படுவது அவசியமாகும்.

இப்படிப்பட்ட செங்கோலை ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை தூக்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார்,ஓடிய அவர் அதனை எங்கோ ஒளித்து விட்டு பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது , என்பதலாம் வேறுவிடயம். சரி நாம் விசயதுக்கு வருவோம்.
செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.

பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் செங்கோல் காணப்படும்.
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???.....

Friday, March 20, 2009

எனது வலைப்பதிவில் மாற்றங்களை ஏற்ப்படுத்திய புலக்கர் ஒழிக!!!

Thursday, March 19, 2009

ஆர்தர் சி கிளார்க் நினைவு தினம் (19.03.2009)















(
Sir Arthur Charles Clarke, 16.12.1917 - 19.03.2008)
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆர்தர் சி கிளார்க் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து குடியுரிமையைப் பெற்ற அவர், தனது இறுதிக்காலம் வரை இலங்கையிலே வாழ்ந்து வந்தார்.

2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' மூலம்
அதிகளவுக்கு பிரபல்யம் பெற்ற ஆர்தர் சி கிளார்க் இங்கிலாந்தில் 1917 டிசம்பர் 16 இல் பிறந்தவர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராக பணிபுரிந்தார். தொடர்பாடல்களுக்கு பூமியை சுற்றிவரும் செய்மதிகளை உபயோகப்படுத்த முடியுமென முதலில் கருத்தினை முன்வைத்தவர்களில் கிளார்க்கும் ஒருவராவார். மனிதனால் சந்திரனுக்கு செல்ல முடியுமென்று 1940 களில் எதிர்வு கூறியவர் ஆர்தர் சி கிளார்க். அச்சமயம் இதனை உபயோகமற்ற கதையென சிந்தனையாளர்கள் நிராகரித்திருந்தனர்.

1969 இல் நீல் ஆம்ஸ் ரோங் சந்திரனில் இறங்கியபோது, கிளார்க்கின் புத்தி ஜீவித்தனமான வழிகாட்டுதலே சந்திரனுக்கு செல்வதற்கு தம்மை வழிநடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆர்தர் சி கிளார்க் சுமார் 100 புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அநேகமாக எழுத்தாளர் என்றே அவர் நினைவு கூரப்பட்டார்.

விஞ்ஞானப்புனைகதைகளிலும் பார்க்க பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி(2001: A space odyssey) அவருக்கு அதிக புகழை ஈட்டிக் கொடுத்தது.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்பதே தனது விருப்பம் என தனது இறுதி பிறந்த தினத்தை கொண்டாடிய போது அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் ஆர்தர் சி கிளார்க்ப்பற்றி படிக்க..


Wednesday, March 18, 2009

உன் பார்வை

நீ
கடந்து
போன தடயமே
இல்லாமல்
அமைதியாய்
இருக்கிறது
வீதி.!

ஆச்சரியம்!
அதி வேக‌
ரயிலொன்று
கடந்து போன‌
தண்டவாளம் போல்
இன்னும்
அதிர்கிறது
என்
இதயம்.

Sunday, March 15, 2009

தந்தைக்கு ஒரு தாலாட்டு

கவிஞ்சர் மு.மேத்தா அவர்களின் "இதயத்தில் நாற்காலி" என்ற நூலில் தந்தைக்கு ஒரு தாலாட்டு என்ற கவிதையை படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களாகவே இந்த கவிதயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். நேரம் இதோ வந்து விட்டது. நான் இரசித்த கவி நீங்களும் இரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...

தந்தைக்கு ஒரு தாலாட்டு

துருதுருத்த கவலைகளில்
தூக்கமில்லா இரவுகளில்
தவிதவிக்கும் தந்தையே!
நான்
தாலாட்டுப் பாடட்டுமா?

ஓய்வெடுக்க மனமின்றி
உழைப்பதற்கும் வழியின்றி
பாய் வெறுத்த தந்தையே
நான்
பாட்டொன்று பாடட்டுமா?

நீதியின் பாதையிலே
நெடும் பயணம் நடத்தியதால்
பாதியாய் ஆனவரே
நான்
பாராட்டுக் கூறட்டுமா..?

தேரோடும் கனவுகளைத்
தெருவேடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே
நான்
புகழ்மாலை போடட்டுமா...?

ஒன்பதாம் வயது முதல்
உருகியதை அறியாத‌
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான்
மேடை கட்டிப் பேசட்டுமா?

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் உன்னைத்
தட்டிக் கொடுப்பதற்கு
நான்
சந்திரனை அனுப்புகிறேன்!

உன் கண்ணை மூடி நீ
ஓய்வெடுப்பாய் சிறுநேரம் நீ
தூங்கி விழித்தவுடன்
நான்
சூரியனை அனுப்புகிறேன்!

பூமி உனக்களித்த‌
புழுக்கத்தை நீ மறந்து
கண் துயில்வாய் சிறு நேரம்
நான்
காற்றை அனுப்புகிறேன்!

வாழ்க்கை உனக்குச் செய்த‌
வஞ்சகத்தை நீ மறந்து
சிறுபொழுது கண்ணயர்வாய்
நான்
தென்றலை அனுப்புகிறேன்!

விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்! வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான்
அப்படியே அனுப்புகிறேன்!

மு.மேத்தா
நூல்:இதயத்தில் நாற்காலி


Saturday, March 14, 2009

பாருங்கப்பா குழந்தைகள் கருவிலே சிந்திக்க தொடங்கிடுச்சி




பி.கு. படம் நீண்ட நாட்டகளுக்கு முன் மின்னஞல் மூலம் கிடைத்தது யாருடைய சிந்தனை (கார்ட்டூன்) என்று தெரியல அந்த முகம் தெரியா நண்பருக்கு நன்றி.

Friday, March 13, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய பதிவான தியானம்


http://youthful.vikatan.com/youth/bcorner.asp

யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய பதிவான் "தியானம்" குட் Blogs என்ற பகுதியில் பிரசுரமாகியிருக்கின்றது. ஆனால் விடயம் லோட்டாதான் கிடைத்தது."தியானம்" என்ற கட்டுரையை பிரசுரித்தமைக்கு விகடன் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதோடு இந்த செய்தியை அறிய தந்த நண்பரான Sriram கும் இந்த கட்டுரையை எழுத தூண்டிய நண்பர் ஆதவாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.பதிவிற்கு பின்னூட்டமிட்ட என அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/03/blog-post_11.html

பிரியமானவளே


என்
பிரியமானவளே!
உள்ளத்தில்
சுடர்விட்டெரியும்
தீயை
கண்ணீர் துளி
கொண்டு அணைக்க‌
முயல்கின்றேன்


கண்ணீரே இல்லாமல்
வரண்ட விட்ட‌
என் கண்கள்
நீயின்றி
உன்
நினைவுகளுடன்
உறங்க மறுக்கின்றது
என்பதை நீ
அறிவாயா?

யார் எது
கூறினால் என்ன‌?
உன் மீது
நான் கொண்ட‌
அன்பும்
என் மீது
நீ கொண்ட அன்பும்
மாறிடுமோ?

கனவை தந்தவளே
என்
கண்மணியே
உறக்கத்தை மட்டும்
பறித்தாயே!

உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.


- சானா.கலை
இராகலை

Wednesday, March 11, 2009

தியானம்


அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.

தியானம் செய்வதற்காக பொதுவாக அமைதியான இடங்களையே தேர்ந்து எடுத்துக்கொள்வர். தியானத்தில் ஈடுபடும் போது, தான் விரும்பி வணங்கும் தெய்வத்தையோ , ஒரு பொருளையோ, அல்லது ஒரு கருத்தையோ நினைவில் நிறுத்திக்கொண்டு மன எண்ண ஓட்டங்கள் உருவாவதை தடுத்து நிறுத்துவதன் மூலம் அமைதியை அடையலாம் என்பதே தியானத்தின் நோக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.

மனதின் எண்ண ஓட்டத்தை துடுத்து நிறுத்துவதற்க்காக நமது ரிஷிகளும், முனிவர்களும் தியானம் செய்து வந்ததை நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம்.இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.மெலிந்தால் முனிவருக்கழகு என்பார்கள் ஆனால் நமக்கு எவ்வளவு பொருந்தும் என தெரியவில்லை எனக்கு.

என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே எனது கேள்வி. ஒரு அழகான பாடலையோ, இசையயோ அல்லது சம்பவங்களையோ நாம் கேட்டகும் போது பார்க்கும் போது எமது எண்ண ஓட்டம் நின்று ஓர் அமைதியான நிலைக்கு நாம் உந்தப்படுவோம். அந்த சந்தர்ப்பங்களில் நாம் எதையும் நினைப்பதில்லை எதற்கும் ஆசைப்படுவதுமில்லை.மெய் மறந்து அந்த பாடலை கேட்டேன் என நம்மில் பலர் சொல்ல கேட்டு இருக்கின்றோம், அதாவது நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் முழு மனதுடன் இருப்போமானால் மனதின் எண்ண ஓட்டத்தை நிறுத்த முடியும் ஆகவே எமக்கு
தனியே சென்று அமைதியான இடத்தில் தியானம் செய்ய வேண்டியிருக்காது.

ஒருவன் தன் முழு மனதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாதப்பட்சத்திலே தான் தனிமையான இடங்களுக்கு சென்று தியானம் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒருவன் தன் மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தனது மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை ஆழ்ந்து கவனித்துக்கொண்டு வர‌ வேண்டும் என கூறப்படுகின்றது. அப்படி கவனித்துக்கொள்ள சுய அறிவு அவசியாமாகும். அப்படி எமது மன எண்ண ஓட்டத்தை தெரிந்துக்கொண்டால் எம்முடைய ஆற்றலை நாமே உணர்ந்து கொள்ளலாம் அதன் மூலம் எமது புத்தி நுட்பத்தை அதிகரித்து கொள்ள முடியும்.இதன் மூலம் நாம் தெளிவான நிலையை அடையும் போது எது சரி பிழை என உணர்ந்து அதன் மூலம் அமைதியடையலாம்.

தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது அல்லது வேண்டப்படுகின்றது என கூறலாம்.
தியானம் தொடரும்......

முதல் பதிவு
தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/02/blog-post_19.html

பி.கு:
## ஆதவா February 20, 2009 7:47 AM
மனதிற்குள் அமைதியை இருத்தும் நிலை, தியானம்.... ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். உதாரணத்தீற்கு, தியானம் எப்படி செய்வது, அதன் வகைகள் (இன்னும் உண்டு) பலன்கள்... இப்படி பல எழுதியிருக்கலாம்...தியானம் செய்தவருக்குத்தான் தெரியும்... அமைதியின் முழுவடிவம்.

Sinthu February 21, 2009 8:28 PM
## அண்ணா தியானம் என்றால் என்ன? அதை தேடி பலா நாட்கள் அலைந்தவள் நான்..பலருக்கும் விளங்குவதட்காக கொஞ்சம் வரைவிலக்கணத்தைச் சொல்லுங்களேன்..

Saturday, March 7, 2009

பெண்கள் தினமும் மலையக பெண்களும்

மார்ச் 08 - மகளிர் தின வாழ்த்துக்கள்.(08.03.2009)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
இவை பெரியாரின் கூற்றுக்கள்
இந்த கூற்றுக்கள் இன்று மகளிர் தினத்திற்காக ஒரு ஞாபக குறிப்பாக வைத்துக்கொள்ளுவோம்.

இன்று 150 ஆண்டுகளுக்கு முன் மேலைத்தேயவர்களினால் இந்தியாவிளிருந்து கோப்பித்தோட்டங்களுக்கும், தேயிலை தோட்டங்களுக்கும் கூலிகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டமே இன்றும் இலங்கையின் பொருளாதரத்தில் முக்கிய பங்கை வகிப்பது யாவரும் அறிந்த உண்மைகள்.(1968 களில் இலங்கை தேசிய வருமானத்தில் 75% ) இன்றைய மகளிர் தினத்தில் அவர்கள் பற்றிய ஒரு பார்வையை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்த பாடலையும் ஒரு முறை நினைவு கூறுவது பொருத்தமாகும்.

"கோண கோண மலை ஏறி

கோப்பி பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சின்னு

ஒதச்சானாம் சின்ன தோர"


"ஊத்தாத அடமழையில்

ஒதறல் எடுக்குதடா - அந்த

தாத்தான் கணக்கப்புள்ள

கத்தி தொலைக்கிறானே

ஏத்தல ஏறி எறங்க முடியுமா

சீத்துபூத்தன் னெனக்கு

சீவன் வதை போகுதையோ

எத்தனை நாளைக்கிதான் - இந்த

எழவ எடுக்கிறது

வெக்கங்கெட்ட நாயிகளும்

எகத்தாளம் போடுதுன்னு

இருந்துதான் பாத்துடுவோம்"

இந்த பாடலின் வரிகள் மலையக பொண்கள் அவர்களுக்கு இழைக்கும் சுரண்டல்களுக்கு சினம்கொண்டு பாடுவதாகும்.மலையக பெண்கள் இந்த ஆண் ஆதிக்கத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாகா விடுப்படவில்லை எனபது குறிப்பிடகூடியவொன்று.

இவர்களின் வேலைத்தளங்களைப் பற்றி சிலவற்றை கூற வேண்டும்.

# சாதரணமாக காலை 5 மணிக்கு துயில் எழுந்து (கடும் குளிரிளும்,பனியிலும்) கனவன் உட்டப்பட பிள்ளைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல ஒழுங்கு செய்ய‌ வேண்டும்.

# அதே நேரம் 7.30 மணியலவில் புறப்பட்டு 8.00 மணிக்கு முன் சுமார் 4 - 8 வரையான கிலோ மீற்றர் வரை நடந்தே சொல்ல வேண்டும்.

# தான் பறித்த கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலைக்கு தானே சுமந்து வர வேண்டும்.(கற்பினி பெண்கள் இதற்கு விதிவிலகல்ல‌)

# வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)

# வேலை தளங்களில் கழிவரைகள் மற்றும் ஓய்வறைகள் இல்லை என்பது முக்கியாமாக கவனத்தில் கொள்ள வேண்டும். (கழிவரைகள் இல்லாத வேலைத்தளம் உலகிலே இதுவொன்றாக தான் இருக்க வேண்டும்)

# மழை காலங்களில் ரப்பர் பொலித்தீன்களை தலைகளுக்கு அணிந்துக் கொண்டு பணிபுரிவார்கள். (அட்டை பூச்சி மற்று விஷ ஜந்துகளிற்கு மத்தியில்)

# முதலுதவி சலுகைகள் கிடையாது.

இவை தவிர இன்னும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டும் கேட்டபதற்கு யாரு முன் வராத நிலையில் தொழில் புரிகின்றார்கள்.

இப்பிரசினைகளுக்கு தீர்விற்கு எந்த அரசியல்வாதிளையும் நம்பி பிரயோசனமில்லை. இதுவரை இது போன்ற விடயங்களை எந்த மேடைகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி அரசியவாதிகள் பேசியதாக சரித்திரம் இல்லை.மக்கள் முன் வந்து ஒன்றுப்பட்டு போராட்டங்களை நடத்தும் வரை விடிவோ விமோசனமோ கிடையாது என்பது மட்டும் உறுதி.

அடுத்ததாக பொண்களின் கல்வியை உற்று நோக்கினால்,

ஓரளவு தற்போது கல்வியில் முன்னேற்றம் கண்டுவருகின்றன என்ற போதும் முழுமை பெறவில்லை என கூறலாம். இவர்களுக்கு கல்வியில் முன்னேற முட்டுக்கட்ட்டையாக இருப்பது பொதுவாகவே வருமானமின்னையே.
மற்றது அக்கறையின்மை, சரியான வழிகாட்டல்கள் இல்லாதமை என்று இன்னும் ஏராளமாக கூறலாம்.

அதோடு ஆசிரியர் தொழிலை தவிர வேறு துறைகளில் அவர்களின் பங்கு மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் வேறு அரச துறைகளில் எமக்கு இடமில்லை என்பதோடு சகோதரயின‌த்தவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கல்வி கற்க பாடசாலைகளில் போதிய வளமின்மை.

இன்னும் ஏராளமான அநீதிகள் மலையகத்தில் நடந்து வருகின்ற அதே வேளை வடக்கில் யுத்த சூழ்நிலையில் எம் பொண்களுக்கு ஏற்ப்பட்டு வரும் கொடுமைகளும் ஏராளம் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவ்வளவு நடந்தேறிக்கொண்டு இருக்கின்ற வேலையில் எம்மால் எப்படி கூற முடியும் பெண்கள் சரிசமமாக வாழ்கின்றார்கள், பெண் அடிமை ஒழிந்து விட்டது என்று.? ஒரு பக்கம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் கூட இன்னும் பல அடிப்படை தேவைகள் கூட அற்ற நிலையிலே கிராமிய பெண்களின் வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது

பச்சை பசேலாக
பசுமை நிறைந்ததாக‌
காட்சி கொடுக்கும்

மலையகம் !

அதன்

பசுமைக்குள்
ஒழிந்திருக்கும்

எம் பெண்களின்

ரணங்களும்
வேதனைகளும்

அவள்

சிந்து கண்ணீரில்

பூத்து குழுங்கும்

தேயிலைச் சொடிகள்.

கண்ணீர் வெளிவராமல்
காவல் காக்கும்

மலைகளும்

அதிகாரவர்க்கமும்.


உனது

சோக கீதத்தை

காற்றினில்
பரவ செய்திடு


உனக்கொரு

விடிவு தேடி

விழித்திரு

இல்லையேல்

இன்னும்

பல யுகங்கள்
விடியாமலே

போய்விடும்.


உனக்கு
துணையாக‌

நாம்மிருப்போம்.

சிறகு
விரித்து பறந்திடு.


- சானா.கலை
இராகலை

உழைக்கும் கரங்களே உங்களுக்கு மணமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். உங்களுக்கு தலைவணங்குகின்றேன்.






பெரியாரின் கூற்றுக்கள் பெரியார் என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்தளத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பெண்கள் தினத்தைப்பற்றி தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
ரசனைக்காரி....
internationalwomensday...


இதனோடு தொடர்புடைய கவி்தைகள் சில

தேயிலைச் செடி
சந்தியில் நடந்த கதை

மலையகம் தொடர்பான வலைப்பதிவு
நண்பரும் சக வலைப்பதிவாளருமான நிர்ஷனின் புதிய மலையகம் வலைப்பதிவு

Thursday, March 5, 2009

முரண்களின் முகவரி

கொள்ளைக்காரனிடம்
தப்பி வந்து
காக்கிச்சட்டையிடம்
பறிகொடுக்கும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

வயிற்றுப் பிழைப்பிற்காய்
வெளிநாடு சென்று
வயிறு சுமந்து வரும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

காமுகனிடம்
தப்பித்து
காதலனிடம் கற்பிழக்கும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

வறுமைக் கோட்டை கடக்க‌
ஆயுள் ரேகை அழிய‌
உழைத்து உயராத நீ!

~~~~~~~~~~~~~~~~~~

நீ என்ன‌
முரண்களின் முகவரியா?
யார் யாரையோ
குளிர்ச்சிப்படுத்தும்
கவரியா?

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html
.